கண்ணீரை புன்னகையால் வென்ற சார்லி சாப்ளினின் உடல்: கல்லறையிலிருந்து திருடப்பட்டது ஏன்?

OruvanOruvan

Charlie Chaplin Comic actor and filmmaker

சார்லி சாப்ளின் உலகின் பிரபலமான நகைச்சுவை நடிகர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே... இவர் உலகில் வாழ்ந்த வாழ்ந்துகொண்டிருக்கின்ற எத்தனையோ பேரை சிரிக்கவைத்தவர்..

இவருடைய வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

சார்லி சாப்ளின் லண்டனில் ஏப்ரல் 16ஆம் திகதி 1889ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஒரு தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர்,எழுத்தாளர், வசனகர்த்தா என பன்முகம் கொண்டவர்.

ஓஸ்கார் விருதும் பெற்றவர்.

OruvanOruvan

அவருடைய பெற்றோர்கள் ஏற்கனவே திரைத்துறையில் இருந்ததால் தானும் திரைத்துறையில் பிரகாசிக்க வேண்டும் என ஆசைப்பட்டு நடிப்புத்துறைக்குள் வந்தார்.

பெற்றோரின் விவாகரத்து, தந்தையின் இரண்டாம் திருமணம் என தன்னுடைய சிறுவயதில் பல இன்னல்களுக்கு சார்லி முகங்கொடுத்தார். இதனால் அவரின் சிறுவயது வாழ்வை அவரால் சரியாக அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்கிடையில் தாயின் உடல்நிலை மோசமடையவே தந்தையின் பாதுகாப்புக்கு கீழ் அனுப்பப்பட்டார் சார்லி. காலப்போக்கில் தாய் குணமடைந்தபிறகு தாயுடன் மீண்டும் சென்ற சாப்ளி, தனது தாய்க்கு ஏற்பட்ட அவமானத்தை போக்க மேடையேறி பாடல் பாடத் தொடங்கினார்.

OruvanOruvan

சிறந்த நடிகராக வேண்டும் என்ற இலட்சியம்

சிறந்த நடிகராக வேண்டும் என்ற இலட்சியத்தில் சிறிய சிறிய மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதன்மூலம் அவருக்கு கிடைத்த பணம் அவரின் பொருளாதார நிலையை மாற்ற ஏதுவாக அமைந்தது.

காலப்போக்கில் அது அவரின் மனதுக்கு பிடித்த வேலையாக மாறவே, பெரிய மேடை நாடகத்திலும் திரைப்படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

சார்லிக்கு படிக்க தெரியாது

என்னதான் பெரிய பெரிய வாய்ப்பு கிடைத்தாலும் சார்லியால் கதையின் வசனங்களை வாசிக்க முடியவில்லை. போதிய கல்விஅறிவு இன்மையால் அவர் பெரிதும் சிரமப்பட்டார். ஆனாலும், அது அவருக்கு பெரிய சவாலாக மாறியது.

இதனால் வசனம் சொல்லி தருவதை கிரகித்து அதை அப்படியே ஒப்பித்து தன்னுடைய நடிப்பு திறனால் பெரிய பெயர் பெற்றார்.

OruvanOruvan

OruvanOruvan

OruvanOruvan

OruvanOruvan

தனிமையில் தவித்த சார்லி

என்னதான் மிகப்பெரிய நடிகராகி சார்லியின் பெயர் பேசப்பட்டாலும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை தனிமையிலும் சந்தோசம் இல்லாமலும் கழித்து வந்தார். ஆனாலும் மனம் தளரவில்லை. மக்களை சிரிக்க வைக்கும் வேலையை சரியாக செய்து வந்தார்.

உலகப்போர் தொடர்பான பல விடயங்களை நகைச்சுவையாக முன்வைத்த சார்லிக்கு அமெரிக்கா, 'ரஷ்யன் ஏஜன்ட்' என குற்றம் சுமத்தியது.

சார்லியின் உயிரிழப்பு

1977ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி ப்ரைன் ஸ்ட்ரோக் எனப்படும் மூளை பக்கவாத நோய்க்கு உள்ளானார் . இதனால் அவருக்கு மீண்டும் எழுந்து வர முடியவில்லை. ஆனால், இவருடைய மரணத்தில் கண்டறியமுடியாத ஒரு மர்மம் இருப்பதாக அனைவரும் நம்பினர்.

திருடப்பட்ட சார்லியின் உடல்

சார்லியின் உயிரிழப்புக்கு பிறகு அவரின் உடல் சுவிஸர்லாந்தில் அமைந்துள்ள கோர்சியஸ் சர்வவே எனப்படும் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

அடக்கம் செய்து இரண்டே நாளில், கல்லறையை தோண்டி யாரோ அவரின் உடலை திருடிவிட்டு சென்றார்கள். திருடியவர்கள் உடலை மீள தரவேண்டும் என்றால், அதிக பணம் தர வேண்டும் என கோரியுள்ளனர்.