குளியலறையில் திருமண கொண்டாட்டம்!: இது நல்லா இருக்கே

OruvanOruvan

Marriage in bathroom

தங்களது திருமணம் எப்படி நடக்க வேண்டும் என்ற கனவு பலருக்கும் இருக்கும். பிரம்மாண்ட ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள் என பல இடங்களில் திருமணங்கள் நடைபெறுகின்றன.

ஆனால், அமெரிக்காவில் ஒரு தம்பதி வித்தியாசமாக தங்களது திருமணத்தை பிரபலமான கடையின் குளியலறையில் நடத்தியுள்ளனர்.

Hop Shops என்ற அந்த கடையின் குளியலறையில் டிஸ்கோ தீம் இருப்பதால் மணப்பெண்ணான டியானாவுக்கு இந்த இடத்தில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. அந்த ஆசையை மணமகன் நிறைவேற்றியுள்ளார்.

இந்த திருமண ஏற்பாடுகளுக்காக குறித்த குளியலறை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. திருமணத்துக்கு வந்தவர்களை வரவேற்கும் வகையில், வைக்கப்பட்ட பலகையில் 'அசௌகரியத்துக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்' என குறிப்பிடப்பட்டிருந்தது.

மணமகன் மற்றும் மணமகள் இருவரும் தேவாலயத்தில் திருமணம் செய்து கொள்வதைப்போல் கோட் சூட், ஃப்ரொக் அணிந்து குளியலறையில் மோதிரம் மாற்றிக் கொண்டனர்.