கடலுக்கு அடியில் ஒரு சொர்க்கம்!: மாலைத்தீவின் முராகா ஹோட்டல்

OruvanOruvan

Muraka hotel in Maldives

கடலுக்கு அடியில் ஒரு சொர்க்கம் இருப்பது என்னவோ உண்மைதான். காரணம், விதவிதமான மீன்கள், தாவரங்கள் என பார்ப்பதற்கு வியப்பை ஏற்படுத்தும்.

இப்படியிருக்கும்போது கடலுக்கு அடியில் ஒரு ஹோட்டல் இருந்தால் எப்படியிருக்கும்? அதில் நீங்கள் தங்கினால் எப்படியிருக்கும்? என என்றாவது சிந்தித்திருக்கிறீர்களா?

இந்த ஆசையை நிறைவேற்றிக் காட்டியிருக்கிறது மாலைத்தீவு.

ஆம், மாலைத்தீவில் முராகா என்ற ஹோட்டலானது, கடலுக்கு அடியில் சுமார் 16 அடி ஆழத்தில் அமைந்துள்ளது.

இரண்டு மாடியைக் கொண்ட இந்த ஹோட்டலில் மசாஜ் சென்டர், அருமையான படுக்கையறை, ஃபிட்னஸ் பயிற்சி, சமைப்பதற்கான சமையல் கலைஞர்கள் என அனைத்து வசதிகளும் உண்டு.

இந்நிலையில் இந்த ஹோட்டலில் தங்கியிருந்த தம்பதியினர் இந்த ஹோட்டலின் ஆடம்பர அம்சங்களை வீடியோவாக பகிர்ந்துள்ளனர்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.