குக் வித் கோமாளியின் புதிய நடுவர் யார் தெரியுமா?: இந்த திரைப்பட கதாநாயகன் தான்

OruvanOruvan

Cook with comali season 5

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான்.

இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்களுமே மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், திடீரென இந்த நிகழ்ச்சியின் நடுவரான வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியை விட்டு விலகினார்.

இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5 இல் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக யார் நடுவராக வருவார் என எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி கிடைத்துள்ளது.

ஆம், செஃப் தாமுவுடன் கைகோர்க்கப் போகும் இன்னொரு நடுவர், மெஹந்தி சர்க்கஸ் திரைப்பட நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ்.

இவர் தொழிலதிபராக மட்டுமில்லாமல் ஒரு பெரிய கேட்டரிங் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

பல பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் இவர் தான் கேட்டரிங் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பான ப்ரோமோ வீடியோவொன்றை விஜய் டிவி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.