பதினான்கு வருடங்களுக்கு பின் கேரளாவில் தளபதி: ரசிகர்களுக்கு கியூட் அட்வைஸ்; வைரலாகும் காணொளி

OruvanOruvan

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் தளபதி விஜயின் ‘தி கோட்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக சுமார் 14 வருடங்களுக்கு பின்னர் தளபதி விஜய் கேரளா சென்றடைந்தார். தளபதிக்கு ரசிகர்களின் உற்சாக வரவேற்பளிக்கும் காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தளபதிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். தளபதியின் காரை ரசிகர்கள் பின்தொடர்ந்து செல்லும் காட்சிகளும் வைரலாகி வருகின்றன. கிட்டத்தட்ட 4 நாட்களுக்கும் மேலாக கேராளவில் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கேரள தளபதி ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

இந்நிலையில் தளபதியின் அரசியல் பிரவேசத்திற்கு மத்தியில் கேரள ரசிகர்களை சந்தித்துள்ளார்.

இயக்குனர் சித்திக் இயக்கத்தில் வெளியான ‘காவலன்’ படத்தின் படப்பிடிப்புக்காக 2010 ஆம் ஆண்டு தளபதி கேரளா சென்றார். அதன் பிறகு அவர் எந்தப் பபடத்தின் படபிடிப்புக்காகவும் கேரளா செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களுக்கு கியூட் அட்வைஸ்

அன்பு மழையில் நனையவைத்த கேரள ரசிகர்களுக்கு தளபதி தனது கியூட்டான ரியக்சன் மூலம் குட்டி அட்வைஸ் ஒன்றை வழங்கியுள்ளார்.

தளபதி பயணித்த காரை பின் தொடர்ந்து காணொளிகளை ரசிகர்கள் பதிவு செய்தனர். இதன்போது ரசிகர் ஒருவர் வாகனம் ஓட்டுவதை விடுத்து தளபதியை ரசித்து காணொளி எடுத்துள்ளார்.

இதனை காருக்குள் இருந்து அவதானித்த தளபதி, தனது கியூட்டான ரியக்சன் மூலமாக வீதியை பார்த்து வாகனத்தை செலுத்துமாறு கியூட் ரியக்சன் ஊடாக தெரிவித்துள்ளமை ரசிகர்களை இன்னும் குஷியில் ஆழ்த்தியுள்ளது.

OruvanOruvan