பாம்புகளை குடும்ப அங்கத்தவராக நடத்தும் கிராமத்தினர்!: எங்கு தெரியுமா?

OruvanOruvan

Snake and humans are lives as family

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், மஹாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர் மாவட்டத்திலுள்ள ஷெட்பால் எனும் கிராமத்திலுள்ள மக்கள், பாம்புகளை தங்கள் குடும்ப உறுப்பினர்களைப் போல நடத்துகின்றனர்.

பாம்புகளுக்கு உணவளிப்பது, அதனுடன் விளையாடுவது, வீடுகளில் அவற்றுக்கென்று தனி இடம் அமைத்துக்கொடுப்பது என, விநோத பழக்கத்தை பின்பற்றுகின்றனர்.

இந்த கிராமத்திலுள்ள குழந்தைகள் கூட பாம்புகளைக் கண்டு அஞ்சுவதில்லை.

பொதுவாக நாகபஞ்சமி தினத்தன்று நாடு முழுவதும் உள்ள மக்கள் பாம்புகளை வழிபடுவது இயல்பு.

ஆனால், இந்த கிராம மக்கள் ஒரு படி மேலே சென்று பாம்புகளை தமது நண்பனாக, குழந்தையாக, குடும்பத்தில் ஒருத்தராக பார்க்கின்றனர்.

இப்படி வித்தியாசமான பழக்கவழக்கங்களைக் கொண்ட மனிதர்களைப் பார்க்கும்போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

OruvanOruvan

Snake and humans are lives as family