வீதியின் இரு புறமும் உள்ள மரங்களுக்கு வெள்ளையடிக்க என்ன காரணம்?: இந்த மரங்களை வெட்டக்கூடாதா?

OruvanOruvan

Trees Painted by white color

நாம் நீண்ட தூரம் பயணம் செய்யும்போது சாலைகளில் இரு புறமும் வரிசையாக நடப்பட்டிருக்கும் மரங்களைப் பார்ப்போம்.

சில சமயங்களில் அந்த மரங்களின் கீழ்ப் பகுதியில் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கப்பட்டிருக்கும்.

இதற்கு பின்னால் ஒரு அறிவியல் காரணம் உண்டு.

இவ்வாறு மரங்களுக்கு வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கக் காரணம், பாதுகாப்பு. அதாவது, மரத்துக்கு சுண்ணாம்பு பூசும்போது அது மரத்தின் பட்டை வெடிக்காமல் பாதுகாக்கும். இது மரத்தை வலிமையானதாக மாற்றும்.

அதுமட்டுமின்றி பூச்சி தாக்குதல், கரையான் கூடு கட்டுதல், சூரியக் கதிர்களின் தாக்கம் போன்றவற்றிலிருந்து மரங்களை முழுமையாக பாதுகாக்கிறது.

OruvanOruvan

Trees Painted by white color

இதில் பாதசாரிகளின் பாதுகாப்பும் அடங்கியுள்ளது. சில வீதிகளில் தெரு விளக்கு இருக்காது. இதனால் மரங்களுக்கு வெள்ளை நிறம் பூசும்போது, மக்கள் மற்றும் வாகனங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் இவ்வாறு மரங்களுக்கு வெள்ளை பெயிண்ட் அடிப்பதனால், இது வனத்துறையின் பாதுகாப்பில் உள்ள மரம், அவற்றை பொதுமக்கள் வெட்டக்கூடாது என்பதையும் உணர்த்துகிறது.