70 வயதில் ஜாக்கி ஜான்! நெஞ்சை உருக்கிய புகைப்படம்: ரசிகர்கள் உருக்கம்

OruvanOruvan

Jackie Chan

நாம் பார்த்து ரசித்த சிறு வயது சூப்பர் ஹீரோ ஜாக்கி ஜானின் அண்மைய புகைப்படம் உலகளவில் வேகமாக பரவி வருகிறது.

1954ம் ஆண்டு ஏப்ரல் 7ம் திகதி ஹாங்காங்கில் உள்ள விக்டோரியா பீக் எனும் இடத்தில் ஜாக்கி ஜான் பிறந்தார்.

ஆரம்பத்தில் புரூஸ் லீ நடிப்பில் வெளியான படங்களில் துணை நடிகராக நடிக்கத் தொடங்கிய அவர், சண்டை இயக்குநராக அவதாரம் எடுத்தார்.

அதன் பின்னர் ஹீரோவாகவும், இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் சீனா முதல் ஹொலிவுட் வரை தனது அசுரத்தனமான ஆக்‌ஷன் மற்றும் நகைச்சுவைச கலந்த நடிப்புத் திறமையால் உலக சூப்பர் ஸ்டாராக மாறினார்.

69 வயதை கடந்து அடுத்த மாதம் வந்தால் 70 வயதாகி விடும் நிலையில், ஜாக்கி சானின் சமீபத்திய புகைப்படம் ரசிகர்களை சற்றே அதிர்ச்சியாக்கியுள்ளது.

புரூஸ் லீ, ஜாக்கி ஜான், ஜெட்லீக்கு பிறகு சீன சினிமாவில் இருந்து பெரிதாக உலகளவில் ரசிகர்களை கவர்ந்தவர்கள் என்றால் அதிகம் பேருக்கு சரியாக நடிகர்களின் பெயர்கள் கூட தெரியாது.

பல தடைகளை உடைத்தெறிந்து உலகளவில் பிரபலமான ஜாக்கி ஜான் தள்ளாடும் நிலையில் இருக்கும் புகைப்படம் தற்போது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி வருகின்றது.

OruvanOruvan

Jackie Chan