ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்க்கு கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பிரபலங்கள்: எவ்வளவு தெரியுமா?

OruvanOruvan

10 of Instagram’s Highest Paid Stars in 2024

கிறிஸ்டியானோ ரொனால்டோ

கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் மிகவும் பிரபலமான கால்பந்து வீரர்களில் ஒருவர்.

அவரை இன்ஸ்டாகிராமில் 616 மில்லியன் மக்கள் பின்தொடர்கிறார்கள்.

கால்பந்து பற்றி தெரியாதவர்களுக்குக் கூட ரொனால்டோவை பற்றி தெரியும். அவரின் ஒரு பதிவுக்கு அவர் கிட்டதட்ட $ 3,234,000 சம்பாதிக்கிறார்.

OruvanOruvan

Cristiano Ronaldo

லியோ மெஸ்ஸி

அர்ஜென்டினா நாட்டின் பிரபல கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இன்ஸ்டாரகிராமில் அவரை 501மில்லியன் மக்கள் பின்தொடர்கிறார்கள். தன்னுடைய ஒரே ஒரு பதிவின் மூலம் கிட்டதட்ட $2,597,000 சம்பாதிக்கிறார்.

OruvanOruvan

Leo Messi

செலினா கோம்ஸ்

செலினா கோம்ஸ் ஒரு ஸ்பானிஷ் பாடகி மற்றும் நடிகை, அவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

அவர் இன்ஸ்டாகிராமில் அவரை 430 மில்லியன் பார்வையாளர்கள் பின்தொடர்கின்றார்கள்.

அவர் தனது ஒவ்வொரு பதிவுக்கும் $2,558,000 சம்பாதிக்கிறார்.

OruvanOruvan

கைலி ஜென்னர்

கைலி அழகுசாதனப் பொருட்கள் மற்றும் அழகு துறையில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக இருக்கிறார்.

399 மில்லியன் மக்கள் அவரை பின் தொடர்கின்றனர். அவரின் இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் சராசரியாக $2,386,000 சம்பாதிக்கிறார்.

OruvanOruvan

kylie jenner

டுவைன் ஜான்சன்

"தி ராக்" என்று பிரபலமாக அறியப்படும் டுவைன் ஒரு ஹொலிவுட் நடிகர் ஆவார். அவர் முதலில் WWE என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மல்யுத்த வீரராக பிரபலமடைந்தார்.

அவரை 398 மில்லியன் மக்கள் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கின்றனர். ஒரு பதிவின் மூலம் ஜான்சன் சராசரியாக $2,326,000 சம்பாதிக்கிறார்.

OruvanOruvan

Dwayne Johnson

அரியானா கிராண்டே

அரியானா ஒரு விருது பெற்ற அமெரிக்க பாடகி, நடிகை மற்றும் பாடலாசிரியர் ஆவார். அவரது சமீபத்திய ஆல்பமான "ஜஸ்ட் லுக் அப்" உலகெங்கிலும் உள்ள அனைத்து முக்கிய இசை பிரியர்களை கவர்ந்துள்ளது.

அவரை இன்ஸ்டாகிராமில் 380 மில்லியன் மக்கள் பின் தொடர்வதுடன், அவர் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் $2,264,000 டொலர் சம்பாதிக்கிறார்.

OruvanOruvan

ariana grande

கிம் கர்தாஷியன்

கிம் கர்தாஷியன் மற்றொரு உலக புகழ்பெற்ற பிரபலமாவார். அவரை இன்ஸ்டாகிராமில் 364 மில்லியன் மக்கள் பின்பற்றுகின்றனர்.

அவர் ஒரு பதிவின் மூலம் சராசரியாக $2,176,000 சம்பாதிக்கிறார்.

OruvanOruvan

kim kardashian

பியோனஸ் நோல்ஸ்

உலகின் மிகவும் பிரபலமான பாடகர்களில் ஒருவரான பியோனஸ் உலகளவில் 100 மில்லியனுக்கும் அதிகமான கேசட்டுகளை விற்றுள்ளார்.

அவர் இன்ஸ்டாகிராமில் 364 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். அவர் ஒரு பதிவின் மூலம் சராசரியாக $ 1,889,000 சம்பாதிக்கிறார்.

OruvanOruvan

Beyonce Knowles

க்ளோ கர்தாஷியன்

க்ளோ ஜென்னர்-கர்தாஷியன் குழுவைச் சேர்ந்த மற்றொரு தொழிலதிபர்.

அவர் குட் அமெரிக்கன் என்ற ஆடை பிராண்டின் நிறுவுனர். அவரை 311 மில்லியன் மக்கள் இன்ஸ்டகிராமில் பின்பற்றுகின்றனர். அவர் ஒரு பதிவின் மூலம் $1,866,000 சம்பாதிக்கிறார்.

OruvanOruvan

Khloe Kardashian

ஜஸ்டின் பீபர்

பிரபலமான கனேடிய பாடகரான ஜஸ்டின் பீபர் இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளார்.

இன்ஸ்டாகிராமில் மட்டும் அவரை 293 மில்லியன் மக்கள் அவரை பின்தொடர்கிறார்கள். தன்னுடைய ஒரே ஒரு பதிவின் மூலம் சராசரியாக $1,763,000 சம்பாதிக்கிறார்.

OruvanOruvan