இந்திய தெரு உணவுக்கான அங்கீகாரம்: உலகின் சிறந்த சாண்ட்விச்களில் ஒன்றான மும்பையின் வாடா பாவ்

OruvanOruvan

Mumbai's Vada Pav

"உலகின் சிறந்த 50 சிறந்த சாண்ட்விச்கள்" பட்டியலில் மும்பையின் பிரபலமான வடா பாவ் (Vada Pav) 19 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

இது இந்திய தெரு உணவுக்கு கிடைத்த பெரிய வெற்றி என்பதுடன், உலகளாவிய அங்கீகாரமும் ஆகும்.

பிரபலமான உணவு மற்றும் பயண வழிகாட்டி தளமான டேஸ்ட்அட்லஸ் (TasteAtla) அண்மையில் வெளியிட்ட பட்டியலிலேயே வடா பாவ் தனக்கான இடத்தினை பிடித்துள்ளது.

வாடா பாவ் என்றால் என்ன?

வடா பாவ் என்பது ஒரு சைவ உணவாகும். இவ்வகை உணவு மகாராட்டிரம் மற்றும் குஜராத் பகுதிகளில் மிகவும் பரவலான நொறுக்குத்தீனி வகை உணவாகும்.

இதில் உருளைக் கிழங்கு பஜ்ஜியும், ஒரு மென்மையான ரொட்டியும் இருக்கும்.

இதனுடன் நன்கு எண்ணெயில் வறுத்த பச்சை மிளகாயை உடன் சேர்த்து சாப்பிடுவது வழக்கமாக உள்ளது.

காரமான சட்னியும் மற்றும் கிரீமி சொஸ்களும் ஒவ்வொரு கடிக்கும் சுவையை மேலும் சேர்க்கின்றன.

வடை பாவ் என்பது இந்தியாவில் குறிப்பாக மும்பையில் அனைத்து வயதினரும் அனுபவிக்கும் பிரபலமான மற்றும் மலிவு சிற்றுண்டிகளுள் ஒன்றாகும்.

அசோக் வைத்யா என்ற தெரு விற்பனையாளருடன் வடை பாவ் என்ற இந்திய சிற்றுண்டி விற்பனை ஆரம்பமானது என்று டேஸ்ட் அட்லஸ் கூறுகிறது.

அவர் 1960 கள் மற்றும் 1970 களில் மும்பையில் உள்ள ஒரு ரயில் நிலையம் அருகே வடை பாவ் விற்பனையில் ஈடுபட்டார்.

வடை பாவ் மக்களுக்கு மலிவான உணவாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பியதாகவும் கூறப்படுகிறது.

டேஸ்ட்அட்லஸின் அண்மைய உலகின் சிறந்த 50 சிறந்த சாண்ட்விச்கள் பட்டியலில் வியட்நாமின் பான் மி (Bánh mì) முதலிடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

OruvanOruvan

top 20 of Taste Atlas' Best Sandwiches in the World list.