உலகிலேயே உயர்ரக துணி இதுதான்!: இந்த ஆபத்தான விலங்கிலிருந்துதான் நெய்யப்படுகிறது

OruvanOruvan

Costly dress in the world

தாம் அணியும் உடைகள்தான் மற்றவர்கள் அணிவதை விட உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கும் உள்ளது.

அந்த வகையில் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த துணி எது தெரியுமா?

குளிர் காலத்துக்கு ஏற்ற உடையாகக் கருதப்படும் விக்குனா துணி தான் உலகிலேயே மிகவும் காஸ்ட்லி.

உலகில் மிகவும் ஆபத்தான விலங்குகளில் ஒன்றாக கருதப்படும் ஆண்டிஸ் மலையில் உள்ள விக்குனா ஒட்டகத்தின் தோளிலிருந்து நெய்யப்படும் ஆடைகள்தான் விக்குனா ஆடைகள்.

1960ஆம் வருடம் இந்த ஆடை கம்பளி ஆடை என அறிவிக்கப்பட்டன.

ஒரு ஃபர் கோட் செய்வதற்கு 35 விக்குனாக்கள் தோலை அகற்ற வேண்டும்.

OruvanOruvan

Costly dress in the world

இந்த விக்குனா கம்பளியின் தடிமன், 12 தொடக்கம் 14 மைக்ரோன்கள் என்று அறியப்படுகிறது.

விக்குனா துணியினால் செய்யப்பட்ட ஒரு ஜோடி காலுறை சுமார் ரூபாய் 80,000க்கும் ஒரு சட்டை ரூபாய் 4.23இலட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன் காரணமாகவே விக்குனா ஆடை உலகின் மிகவும் விலையுயர்ந்த துணியாக கருதப்படுகிறது.