ஈழத்து குயில் கில்மிஷா கொடுத்த இசை விருந்து: வெளியானது முதல் ஆல்பம் பாடல்! குவியும் பாராட்டுக்கள்

OruvanOruvan

Kaarigaiye

சரிகமப நிகழ்ச்சியின் வெற்றியாளரான ஈழத்து குயில் கில்மிஷா பாடிய முதல் ஆல்பம் பாடல் வெளியாக இணையத்தினை ஆக்கிரமித்துள்ளது.

சர்வதேச மகளிர் தினம் என்பது ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.

இந்த நாளானது, வரலாற்றிலும், தற்காலத்திலும் சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் என பல்வேறு துறைகளில் பெண்களின் பங்களிப்பை கௌரவப்படுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது.

பாலின சமத்துவத்தை நோக்கிய பெண்களின் பயணத்தின் மிக முக்கிய படியாக இந்த நாள் அமைந்துள்ளது.

பெண்களுக்கு இருக்கும் தடைகளை உடைத்தெறிந்த, முன்னேறிய பெண்களைப் பற்றியும், பெண்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தும் நாளாக இருக்கிறது.

இந்த நாளை மேலும் சிறப்பாக்க ஈழக் குயில் கில்மிஷத தனது முதல் ஆலபம் பாடலை வெளியிட்டு பெண்களுக்கு மகளீர் தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

Trm Picture தயாரிப்பில், வெற்றி சிந்துஜன் எழுத்தில் “காரிகையே” பாடல் உருவாகி உலகவாழ் தமிழ் ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது.