மழை பெய்தால் பணம் திருப்பி தரப்படும்!: வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்ட ஹோட்டல்
உலகம் முழுவதும் பல்வேறு ஹோட்டல்கள் உள்ளன. அந்த ஹோட்டல்கள் தங்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பலவிதமான சலுகைகளை வழங்குகின்றன.
அந்த வகையில், இண்டர்காண்டினெண்டல் சிங்கப்பூர் என்ற ஹோட்டலானது புதுவிதமான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பு என்னவென்றால், இந்த ஹோட்டலில் தங்கியிருக்கும் விருந்தினர்களின் பயண திட்டங்கள் ஏதாவது, மழை காரணத்தினால் பாதிக்கப்பட்டால், ஒரு இரவு ஹோட்டலில் தங்குவதற்கு உண்டாகும் தொகையை ஹோட்டல் நிர்வாகம் திருப்பித் தரும்.
வருடத்துக்கு சராசரியாக 171 நாட்கள் மழை பெய்கிறது. இதனால் விருந்தினர்களை ஈர்க்கும் விதத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சலுகைக்கு இன்சூரன்ஸ் பேக்கேஜ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கு சில வரைமுறைகள் உள்ளன. அதாவது, எப்போது மழை பெய்தாலும் உங்களுக்கு பணம் திருப்பித் தர மாட்டார்கள். பகல் நேரங்களில் குறிப்பிட்ட நான்கு மணி நேரத்துக்குள் மொத்தமாக 120 நிமிடங்கள் மழை பெய்திருந்தால் மாத்திரமே பணம் திருப்பி தரப்படும்.
ஜூனியர் சூட் அறையில் தங்கினால் ரூபாய் 52,000 தொகையும் பிரசிடென்ஷியல் சூட்டில் தங்கியிருந்தால் ரூபாய் 2.7 இலட்சமும் திருப்பி தரப்படும்.
இது பணமாக கிடைக்காது. வவுச்சராக கொடுப்பார்கள். அதைக்கொண்டு ஆறு மாதங்களுக்குள் ஹோட்டலில் உள்ள ஏதாவது ஒரு சேவையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.