மின்மினிப்பூச்சிகளுக்கு மின்னும் சக்தி கிடைத்தது எப்படி?: இதுதான் காரணமா?

OruvanOruvan

Fireflies

மின்மினிப் பூச்சி மின்னும் என நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அவை ஏன் மின்னுகிறது என நம்மில் பலருக்குத் தெரியாது.

மின்மினிப் பூச்சிகள் இரவு நேரங்களில் மட்டும் ஒளிரும். மின்மினிப்பூச்சிகளைக் கொண்டே கோடைக்காலம் தொடங்கிவிட்டதை நம்மால் அறிந்துகொள்ள முடியும்.

முதலில் இரண்டு வாரங்கள் வரையில் லார்வா நிலையில் இருக்கும் மின்மினிப்பூச்சி, 3 வாரங்கள் பூபா நிலையில் இருக்கும். அதற்குப் பின்னர் பூச்சியாக மாறும்.

இந்த மின்மினிப்பூச்சிகள் அதிகபட்சம் 61 நாட்கள் தான் உயிர் வாழும்.

OruvanOruvan

Fireflies

மின்மினிப்பூச்சிகள் இனச்சேர்க்கைக்காகவே இரவு நேரங்களில் ஒளிர்கின்றன. இதுவே அவற்றின் முதன்மையான நோக்கம். இந்த மின்னும் தன்மையானது அதன் துணையை ஈர்க்க உதவுகிறது.

அதுமட்டுமின்றி ஏனைய உயிரினங்களிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், தங்களின் இரைகளை ஈர்க்கவும் மின்மினிப்பூச்சி ஒளிர்கிறது.

மின்மினிப்பூச்சியின் வயிற்றுப் பகுதியில் ஏற்படும் ஒரு வித வேதியியல் மாற்றமே வெளிச்சத்தை உண்டாக்குகிறது.

OruvanOruvan

Fireflies

ஒட்சிசன், அடினோசின், கல்சியம் ஆகியவற்றோடு ப்ரோட்டின் லூசிஃபெரினும் சேர்ந்து ஏற்படுத்தும் வேதியியல் எதிர்வினையின் காரணமாகவே இந்த வெளிச்சம் வயிற்றுப் பகுதியில் உண்டாகிறது.

இந்த எதிர்வினையானது, 'ஒக்ஸ்டேஷன் எதிர்வினை', 'பில்லுமினேஷ்ஸ்' எனவும் அழைக்கப்படும். ஒரு உயிரிலிருந்து உருவாகும் வெளிச்சம் இந்தப் பெயரைக் கொண்டு குறிப்பிடப்படும்.