'டேட் வித் மைக்கல்' டேட்டிங் செல்ல வித்தியாசமான பதிவைப் போட்ட நபர்: வைரலாகும் பதிவு

OruvanOruvan

Date with Michael

பொதுவாக டேட்டிங் என்பது மேலைத்தேய நாடுகளின் வழமையான கலாசாரம் தான். தனக்கு ஏற்றவாறு ஆண், பெண்களை தெரிவு செய்வதற்காக டிண்டர், பப்புள் போன்ற பல டேட்டிங் ஆப்கள் இருக்கின்றன.

இவ்வாறு பல வசதிகள் இருக்கும் நிலையில், அமெரிக்கா நியூயோர்க் நகரைச் சேர்ந்த 33 வயதாகும் சாப்ட்வேர் இன்ஜினியர் மைக்கேல் என்பவர், ஒரு வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அதாவது, உலகம் முழுவதும் பயன்பாட்டிலிருக்கும் ஃபேஸ்புக் வலைத்தளத்தில் ஒரு விளம்பரம் செய்துள்ளார்.

அதில் 'டேட் மைக்கல்' என தொடங்கும் விளம்பரத்தில், நான் 'கனிவான, மகிழ்ச்சியான, ஆர்வமுள்ள, ஆக்கப்பூர்வமான மற்றும் புத்திசாலியான நபர்' என குறிப்பிட்டுள்ளார்.

அந்த விளம்பரத்தைக் க்ளிக் செய்தால், அது கூகுள் ஒன்லைன் படிவத்துக்கு செல்கிறது.

அதில், 'உண்மையான உறவை விரும்பும் பெண்ணை எதிர்பார்க்கிறேன். மற்றும் அவர் நியூயோர்க் நகரின் ரயில் சேவையில் தொடர்பு கொள்ளும் தூரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

OruvanOruvan

Date with Michael