38ஆவது வயதில் நான்காவது குழந்தைக்கு தாயான பிரபல நடிகை: என்ன குழந்தை தெரியுமா?

OruvanOruvan

Gal Gadot

வொண்டர் வுமன் படம் மூலம் பிரபலமான கேல் கெடாட்டுக்கு நான்காவது பெண் குழந்தை பிறந்துள்ளது.

இது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அவருக்கு ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

OruvanOruvan

Gal Gadot

மொடலிங்கில் சாதனை

இஸ்ரேல் நாட்டை பூர்வீகமாகக் கொண்ட கேல் கெடாட் மொடலிங்கில் அதிக ஆர்வம் உடையவர்.

தனது 18ஆவது வயதில் மிஸ் இஸ்ரேல் பட்டத்தை தட்டி சென்றார். அதன் பிறகு ஃபேமஸான அவருக்கு பட வாய்ப்புகளும் கிடைக்க ஆரம்பித்தன.

தொடர்ந்து படங்களில் நடித்த அவருக்கு வொண்டர் வுமன் திரைப்படம் மிகச்சிறந்த அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது.

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் சில காலம் இராணுவத்திலும் பணியாற்றியுள்ளார்.

பிஸியான நடிகையாக வலம் வந்த கேல் கெடாட் கடந்த 2008ஆம் ஆண்டு ஜான் வர்சானோ என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

அவர்களது காதலுக்கு அடையாளமாக முதல் குழந்தையாக அல்மா என்ற பெண் குழந்தை பிறந்தார். அவருக்கு தற்போது ஒன்பது வயதாகிறது. அடுத்ததாக மாயா என்ற பெயரில் நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறார்.

சூழல் இப்படி இருக்க அவருக்கு கடந்த 2021ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு டேனியாலா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

OruvanOruvan

Gal Gadot

மகளுக்கு வித்தியாசமான பெயர்

ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருக்கும் சூழலில் மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

அவருக்கு ஓரி என்று பெயர் வைத்திருக்கிறார்.

ஓரி என்றால் ஹிப்ரு மொழியில் எனது ஒளி என்று அர்த்தம் ஆகும்.

அதுதொடர்பான அறிவிப்பை புகைப்படத்துடன் கேல் கெடாட் வெளியிட்டிருக்கிறார்.

நான்காவதாக பெண் குழந்தை பெற்ற அவருக்கு ரசிகர்களும் திரைத்துறையினரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர்.

நான்காவதாக குழந்தை பெற்றுக்கொண்டாலும் தொடர்ந்து நடிப்பேன் என்று அவர் தெரிவித்திருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

OruvanOruvan

Gal Gadot