இசைக்கு மொழி ஏது?: யு டியுப்பில் பில்லியன் பார்வையாளர்களை கடந்த பாடல்கள்...

OruvanOruvan

Youtube songs

பேசும் சொற்களில் இசையைக் கூட்டிக் கருத்துக்களை வெளிப்படுத்துவது பாடல் . இசையோடு சேர்ந்து பாடல்களை கேட்கும் மனதிற்கு அமைதி பிறக்கின்றது.

கவலை, சந்தோசம், மனவுளைச்சல் என நாம் எந்த மனநிலையில் இருந்தாலும் இசை நமக்கு ஆறுதல் அளிக்கின்றது.

தமிழ் மொழி பாடல்களை தான் கேட்க வேண்டும் என்றில்லை. பிற மொழி பாடல்களும் அர்த்தம் புரியாவிட்டாலும் கேட்கும் பழக்கம் தமிழர்களிடையே அதிகம் இருப்பதாக அண்மைய ஆய்வுகள் தெரிவித்தன.

இதனடிப்படையில், பிற மொழி பாடல்கள் அதிகம் தமிழர்களிடையே இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என ட்ரெண்ட் ஆகியதை நாம் பார்த்திருப்போம்.

அதேபோல் தான் அண்மையில் ஷாருக்கான் மற்றும் அனுஸ்கா சர்மா நடிப்பில் வெளியான Rab Ne Bana Di Jodi என்ற திரைப்படத்தில் உருவான துஜ் மெயின் ரப் என்ற பாடல் ஒரு பில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியுப் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்துள்ளது.

OruvanOruvan

மேலும், ஒரு வீடியோவின் பிரபலத்தின் ஆரம்ப அளவுகோல் பில்லியன்-வியூ கிளப் என்று அழைக்கப்பட்டது.

இது ஆரம்ப பதிவேற்றத்திலிருந்து ஒரு பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை எட்டுவதில் வெற்றி பெற்ற வீடியோக்களைக் குறிக்கிறது.

அதேபோல் தான் டிசம்பர் 2012 இல், "கங்னம் ஸ்டைல்" பாடல் ஒரு பில்லியன் பார்வைகளை எட்டிய முதல் வீடியோ என்ற சாதனையை படைத்திருந்தது.

சிறுவர்களை மையமாக கொண்ட பாடல்கள்

இதேவேளை இணையத்தில் ஒரு பில்லியன் பார்வையானர்களை கடந்த வீடியோக்களில் சிறுவர் பாடல்கள் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

அதில் குறிப்பிட்டு கூறுவதானால், “பேபி ஷார்க்“ 14.09 பில்லியன் பார்வையாளர்களையும் ,“ஜானி ஜானி எஸ் பாப்பா“ 6.87பில்லியன் பார்வையாளர்களையும், “ பாத் சோங்“ எனப்படும் சிறுவர் பாடல் 6.62 பில்லியன் பார்வையாளர்களையும் “வீல்ஸ் ஒன் த பஸ்“ என்ற பாடல் 5.88பில்லியன் பார்வையாளர்களையும் பெற்றுள்ளது.

OruvanOruvan