கீபோர்ட்டில் F மற்றும் J பட்டன்களில் மட்டும் கோடுகள் இருக்க என்ன காரணம்?: தெரிந்து கொள்ளுங்கள்

OruvanOruvan

Keyboard F and J keys

தற்போது கல்வி தொடங்கி தொழில் வரையில் அனைத்துக்குமே கணினி மிக முக்கியமான ஒன்றாக காணப்படுகிறது.

எந்தவொரு வேலையையுமே கணினியைக் கொண்டு மிக இலகுவாக முடித்து விடலாம்.

ஒரு சிலருக்கு கணினியின் கீபோர்ட்டை தட்டுவதென்றாலே மிகவும் பிடிக்கும். காரணம் அதன் பட்டன்கள்.

வரிசையாக எழுத்துகள் மற்றும் சில சிம்போல்ஸ்களுடன் காணப்படும் இந்த கீபோர்ட்டை பயன்படுத்தும் நாம், அதில் F மற்றும் J பட்டனில் இருக்கும் இரண்டு கோடுகளை கவனித்திருப்போம்.

ஆனால், அது இருப்பதற்கான காரணம் என்ன என்பது நமக்கு தெரிந்திருக்காது.

OruvanOruvan

Keyboard F and J keys

கணினியின் கீபோர்டில் உள்ள நடு வரிசை முகப்பு வரிசை விசை நிலை என அழைக்கப்படுகிறது. F மற்றும் J விசைகளில் நமது வலது மற்றும் இடது கைகளை வைத்தவுடன் நீங்கள் விசைகளை அணுகுவது மிகவும் எளிதாகிறது.

இந்த நடுக்கோடுகளில் கைகளை சரியான நிலையில் வைப்பதனால் மேல் மற்றும் கீழ் கோடுகளில் நகர்த்துவது மிகவும் எளிதாகிறது.

இங்கே விரல்களை வைப்பதன் மூலம் நமது இடது கை A,S,D மற்றும் F ஆகியவற்றை உள்ளடக்கியது. அதேசமயம் வலது கை J,K,L மற்றும் (;) ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த சமயத்தில் இரண்டு கட்டை விரல்களும் ஸ்பேஸ்பாரில் இருக்கும்.

கீபோர்ட்டை பார்க்காமல் வேகமாக டைப் செய்வதற்கும் கண் தெரியாதவர்கள் எளிமையாக டைப் செய்யவும் இந்த கோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

OruvanOruvan

Keyboard F and J keys