கற்களை பிரசவிக்கும் பாறை: கருவுறுதலின் சின்னமான அதிசயம்

OruvanOruvan

Birthing Stones

வடக்கு போர்த்துக்கல் பகுதியில் பெட்ராஸ் பர்டிராஸ் என்ற மலை உள்ளது. இதை பிறக்கும் கற்கள் என அழைக்கின்றனர். இதற்கு ஏன் இந்த பெயர் வந்தது?

இந்த மலையானது, அதிசயமான விதத்தில் குழந்தை பாறைகளை பெற்றெடுக்கிறது. அதாவது இந்த மலையிலிருந்து குழந்தை போன்ற பாறைகள் மீண்டும் மீண்டும் வெளிவருவது போல் தெரிகிறதாக கூறப்படுகிறது.

இந்த காரணத்துக்காகவே இதை 'அம்மா - பாறை' என்றும் 'கர்ப்பிணி கல்' என்றும் அழைக்கிறார்கள். இந்த மலையானது கிரனைட் கற்களால் ஆனது. சுமார் ஒரு கிலோமீட்டர் நீளமும் 600 மீட்டர் அகலமும் கொண்ட இந்த மலையானது 300 மில்லியன் வருடங்கள் பழைமையானது.

OruvanOruvan

Birthing Stones

2 முதல் 12 சென்டிமீட்டர் தடிமன் கொண்ட பாறைகளானது, பாறையின் உச்சியிலிருந்து வெளியேறும். இது மலையின் குழந்தைப் போல தெரிகிறது.

இந்த மலையானது, சிறிய ஓவல் பாறைக் கட்டிகளால் சூழப்பட்டிருக்கும். இதன் வெளிப்பற அடுக்கு பயோடைட்டால் ஆனது. இது ஒரு வகையான மைக்கா ஆகும். மழை, பனி போன்றவை இதன் விரிசல்களில் ஊடுருவி குளிர்காலம் வரும்போது அது முற்றிலுமாக உறைந்துவிடுகிறது.

OruvanOruvan

Birthing Stones

பெரிய கிரைனைட் பாறையான அம்மா பாறைகள், இந்த குழந்தை கற்களை வெளியே தள்ளுவதைப் போல் தெரிகிறது.

உள்ளூர் மக்களால் இந்த பாறைகள் கருவுறுதலின் சின்னமாக பார்க்கப்படுகிறது. அதாவது, ஒரு பெண் கருவுறுவதில் பிரச்சினைகள் இருந்தால், தலையணையின் கீழ் இந்த பாறைகளில் ஒன்றை வைத்து உறங்கினால் கருவுறுதலில் இருக்கும் சிக்கல் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையும் உண்டு. ஆனால், இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

OruvanOruvan

Birthing Stones