இந்த நாடுகள்தான் வலிமையான இராணுவத்தைக் கொண்டவை!: வெளியான பட்டியல்

OruvanOruvan

Strongest military in the world

இராணுவப் படை என்பது ஒவ்வொரு நாட்டுக்குமே மிகவும் முக்கியமான ஒன்று. நாட்டைப் பாதுகாக்கவும், யுத்தங்களின்போது முன் நிற்கவும் இராணுவத்தின் உதவி மிக மிக அவசியமாகும்.

அந்த வகையில் குளோபல் ஃபையர் பவர் இந்த வருடத்துக்கான வலிமையான இராணுவப் படையைக் கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

சுமார் 145 நாடுகளிலுள்ள இராணுவப் படைகளின் பலம், பலவீனங்களை ஆய்வு செய்தே இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

சரி இனி அந்த நாடுகளின் பட்டியல் குறித்து பார்ப்போம்.

OruvanOruvan

Strongest military in the world

  • கடந்த பத்து வருடத்துக்கும் மேலாக வலிமையான இராணுவத்தைக் கொண்ட நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இராணுவத்துக்கென்று 761.7 பில்லியன் பணத்தை அமெரிக்கா ஒதுக்குகிறது.

  • இரண்டாவது இடத்தில் ரஷ்யா உள்ளது.

  • மூன்றாவது இடத்தை சீனா தக்கவைத்துள்ளது.

  • நான்காவது இடத்தில் உள்ள இந்தியாவில் 15 இலட்சம் இராணுவ வீரர்கள் உள்ளனர்.

  • 5ஆவது இடத்தில் யுனைடட் கிங்டம் உள்ளது.

  • ஆறாவது இடத்தை தென்கொரியா பிடித்துள்ளது.

  • பாகிஸ்தான் 7ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

  • எட்டாம் இடத்தில் ஜப்பானம் ஒன்பதாம் இடத்தில் பிரான்சும் உள்ளது

  • 10ஆவது இடத்தை இத்தாலி பெற்றுள்ளது.