இந்த நாட்டை ஒரே நாளில் சுற்றிப்பார்த்து விடலாம்!: எந்த நாடு தெரியுமா?

OruvanOruvan

Liechtenstein country

ஒரு ஊரை சுற்றிப்பார்க்கவே ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் தேவைப்படும். ஆனால் ஒரு நாட்டை ஒரே வாரத்தில் சுற்றிப் பார்த்துவிடலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆல்ப்ஸ் மலையின் அழகு மற்றும் பச்சைப் போர்வை போர்த்திய பசுமை, அழகிய கோட்டைகள் நிரம்பப்பெற்ற 'லிச்சென்ஸ்டீன்' நாட்டைதான் ஒரே நாளில் சுற்றிப்பார்த்து விடலாம். இந்த நாட்டின் தலைநகரமாக வடூஸ் காணப்படுவதோடு, இங்குள்ள மக்கள் ஜேர்மன் மொழி பேசுபவர்கள்.

இந்த நாட்டின் மேற்கு மற்றும் தெற்கு பகுதியில் சுவிட்சர்லாந்தும் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் அவுஸ்திரேலியாவும் அமைந்துள்ளது.

OruvanOruvan

Liechtenstein country

சுமார் 40,000 மக்கள் வசிக்கும் இந்த நாட்டில், வடக்கு முனையிலிருந்து தெற்கு முனைவரை வெறும் 15 மயில்கள் தூரமும், கிழக்கு முனையிலிருந்து மேற்கு முனைவரை வெறும் 2.50 மைல்கள் தூரமும் மட்டுமே ஆகும்.

இந்த நாடு உலகின் 6ஆவது சிறிய நாடு என்ற அந்தஸ்தைக் கொண்டது. மேலும் தங்களுக்கென சொந்த நாணயம், கலாசாரம், வரலாற்றைக் கொண்டது.

இவ்வளவு சிறப்பம்சங்கள் நிறைந்த இந்த நாட்டை ஒரே நாளில் சுற்றிப்பார்க்க முடியும்.

OruvanOruvan

Liechtenstein country