விருதுகளை வென்றுக் குவித்தது சுவர்ணவாஹினி தொலைக்காட்சி: சிறந்த அரசியல் நிகழ்ச்சிக்கான விருதையும் வசப்படுத்தியது

OruvanOruvan

Sumathi Awards

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான 29 ஆவது சுமதி விருது வழங்கும் விழாவில் சுவர்ணவாஹினி தொலைக்காட்சி பல விருதுகளை தனதாக்கிக்கொண்டது.

பத்தரமுல்ல, நட்சத்திர விடுதியில் 29 ஆவது சுமதி விருது வழங்கும் விழா நேற்று இடம்பெற்றது.

இந்த விழாவில், எமது சகோதர தொலைக்காட்சியான சுவர்ணவாஹினி தொலைக்காட்சி மற்றும் LIVE at 8 பல பிரிவுகளின் கீழ் விருதுகளை தனதாக்கிக் கொண்டன.

OruvanOruvan

Winner of Sumathi Awards

அதன்படி, 2022 ஆம் ஆண்டின் சிறந்த புலனாய்வு செய்தி அறிக்கைக்கான இரண்டாவது இடத்தை LIVE at 8 செய்தி பிரிவின் ஷியாமல் பண்டார ஜயபத்ம பெற்றுக்கொண்டார்.

மேலும், LIVE at 8 செய்தி பிரிவில் 2023 ஆம் ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி செய்தி அறிக்கைக்கான இரண்டாவது இடத்தை சிசிகெலும் தம்மபிரியா பெற்றுக்கொண்டார்.

சிறந்த தொலைக்காட்சி தொகுப்பாளர் விருதை சுவர்ணவாஹினி அலைவரிசையின் முதித விஜேசுந்தர பெற்றுக்கொண்டார்.

OruvanOruvan

Winner of Sumathi Awards

அத்தோடு, தொலைக்காட்சி நாடகப் பிரிவுக்கான சிறந்த நடிகருக்கான விருதை சாரங்க திசசேகர பெற்றுக்கொண்டார்.

தொலைக்காட்சி நாடகப் பிரிவுக்கான சிறந்த நடிகைக்கான விருதை துஷேனி மியுரங்கி பெற்றுக்கொண்டார்.

OruvanOruvan

Winner of Sumathi Awards

தொலைக்காட்சி நாடகத்திற்கான சிறந்த தொலைக்காட்சி நாடக இசையமைப்பாளருக்கான விருதை நதீக வெலிகொடபொல பெற்றுக்கொண்டார்.

திறமைமிக்க தொலைக்காட்சி நடிகருக்கான விருதை சுராஜ் மாபா பெற்றுக்கொண்டார்.

சிறந்த அரசியல் நிகழ்ச்சிக்கான விருதினை சுவர்ணவாஹினி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிக்காக ஜீவ அபயகோன் பெற்றுக்கொண்டார்.

OruvanOruvan

Winner of Sumathi Awards

OruvanOruvan

Winner of Sumathi Awards

OruvanOruvan

Winner of Sumathi Awards