ஒப்ரேஷன் தியேட்டரில் வருங்கால மனைவியுடன் போட்டோஷூட்: வைத்தியருக்கு ஆப்பு வைத்த சுகாதார துறை

OruvanOruvan

Karnataka Doctor Fired For Pre-Wedding Shoot In Operation Theatre

கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிப்புரியும் வைத்தியர் ஒருவர் தனது திருமணத்துக்கு முந்தைய நாள் எடுத்த போட்டோஷூட் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி அவரின் வேலைக்கு ஆப்பு வைத்துள்ளது.

ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்த வைத்தியர் அபிஷேக் தனது திருமணத்துக்கு முந்தைய போட்டோஷூட்டை புதுமையாக எடுக்க விரும்பியுள்ளார்.

OruvanOruvan

Karnataka Doctor Fired For Pre-Wedding Shoot In Operation Theatre

வருங்கால மனைவியுடன் போட்டோஷூட் எடுத்த வைத்தியர்

ஆப்ரேஷன் தியேட்டரில் அபிஷேக் ஒரு நோயாளிக்கு, அறுவை சிகிச்சை செய்வதை போலவும், அவரது வருங்கால மனைவி அவருக்கு உதவுவதாகவும், போட்டோஷூட் செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு "நோயாளி" எழுந்து உட்கார்ந்து சிரிப்பதுடன் காணொளி முடிவடைகிறது.

புகைப்பட கலைஞர்கள் சிரித்து கொண்டே புகைப்படம் மற்றும் காணொளிகளை பதிவு செய்துள்ளனர். இந்த காணொளிகள் இணையத்தில் வைரலான நிலையில், இணையத்தில் பரவலான விமர்சணங்கள் எழுந்துள்ளது.

பணி நீக்கம் செய்யப்பட்ட வைத்தியர்

போலியாக காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருந்தாலும், அரச சொத்துக்களை வைத்தியர் தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியது கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விடயம் கர்நாடகாவின் சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவை எட்டியுள்ளது.

உடனே அவர் வைத்தியர் அபிஷேகை உடனடியாக பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார். “அரசு மருத்துவமனைகள் பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காகவே தவிர, தனிப்பட்ட ஈடுபாடுகளுக்காக அல்ல” என்று வலியுறுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து வைத்தியர் அபிஷேக் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.