'பொழப்பு தேடி...' இது கதையல்ல... மறைக்கப்பட்ட மலையக சமூகத்தின் குமுறல்!: நம்மவர்களின் படைப்பு
200 வருடங்களுக்கு முன்னர் பிழைப்புக்காக இலங்கைக்கு வந்த நம் மலையகத்தவர்களின் கதையைக் கேட்டால், அதில் கண்ணீரும், வலிகளும், சோகமும் தான் நிறைந்திருக்கிறது.
வருடங்கள் ஓடிப்போனாலும் நம் மலையக மக்களின் வாழ்வில் வறுமையும், எதிர்பார்ப்பும், ஏக்கமும் இன்னும்கூட குறையவில்லை.
பிழைப்பு கொடுத்தவர்கள், நம்மவர்களின் கல்வியை பறித்துக் கொண்டனர், நிம்மதியைப் பறித்துக் கொண்டனர், சந்தோஷத்தை பறித்துக் கொண்டனர்....இன்னும் என்ன இருக்கிறது அவர்களிடம் பறித்துக்கொள்ள?
நம் மலையகத்தவர்களின் கதையைக் கூறப்போனால், ஒரு நாள் போதாது....ஆனால்,'பொழப்பு தேடி' என்ற ஒரு காணொளியில் மலையகத்தவர்களின் மொத்த வலியையும் படைப்பாக கொடுத்திருக்கின்றனர் நம் மலையகக் கலைஞர்கள்.