22 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன மகனை வீடு தேடி வர வைத்த அயோத்தி ராமர்: ஆனால் இறுதியில் நடந்த விபரீதம்

OruvanOruvan

Man who went missing 22 years ago when he was 11 returns home as monk

சிறுவயதில் தொலைந்து போன ஒருவர் பல வருடங்கள் கழித்து சாமியாராக வீடு திரும்பிய ருசிகர சம்பவம் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் பதிவாகியுள்ளது.

சிறுவனாக இருக்கும் போது தொலைந்து போன நபர், சுமார் 22 வருடங்கள் கழித்து துறவியாக மாறி வீடு திரும்பியுள்ளார்.

இத்தனை வருடங்கள் கழித்து ஏன் வீடு திரும்பினார் என்பதை கேட்டால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்.

தொலைந்து போன பிங்கு!

சரியாக 2002ம் ஆண்டு இவர் தொலைந்து போயுள்ளதுடன், இவருடைய பெயர் பிங்கு என தற்போது தெரிய வந்துள்ளது.

11 வயதில் தொலைந்து போனவர் என்ன செய்வது என்று தெரியாமல் ஊரெல்லாம் சுற்றியிருக்கிறார்.

அதன்பின்னர் துறவி ஒருவரை சந்தித்து, அவரிடமே சிஷ்யனாக சேர்ந்துள்ளார்.

அயோத்தி ராமர் கோவில் தரிசனத்திற்காக வீடு திரும்பிய சுவாரஸ்யம்

இத்தனை வருடங்கள் கழித்து உத்தரபிரதேச மாநிலத்தில் அயோத்தி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலை தரிசிக்கவே அவர் வீடு திரும்பியுள்ளார்.

பல வருடங்கள் கழித்து பிங்கு கிராமத்திற்கு வந்ததால் பலருக்கும் அவரை அடையாளம் தெரியவில்லை. பின்னர் தனது மாமாவிடமும் கிராமத்தில் உள்ள சில பெரியவர்களிடமும் தனது அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

உடனடியாக இந்த தகவல் டெல்லியில் பணியாற்றிக் கொண்டிருந்த பிங்குவின் தந்தை ரதிபாலுக்கு தெரிய வர, அவர் உடனடியாக வீட்டிற்கு வந்து தனது மகனைக் அடையாளம் கண்டு கொண்டார்.

OruvanOruvan

பிங்குவின் வயிற்றில் உள்ள காயத் தழும்பே அடையாளம் அவர் யார் என்று கண்டுபிடிக்க உதவியுள்ளது.

இதற்கிடையில் சந்நியாசியாக மாறிய பிங்கு, பாரம்பரிய இந்திய இசைக் கருவியை வாசித்தபடியே பாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இத்தனை வருடங்கள் கழித்து அயோத்தி ராமரினால் மகளை கண்ட மகிழ்ச்சியில் பிங்கு குடும்பம் திகைத்துள்ளது. எனினும் அந்த மகிழ்ச்சி நீடிக்க வில்லை என்பது வேதனையே.

ராமர் கோவிலில் தரிசனம் முடித்த பின்பு, பிங்குவோ தன்னுடைய கிராம மக்களிடம் யாசகம் வாங்கிவிட்டு தான் தங்கியிருக்கும் மடத்திற்கே திரும்பியுள்ளார்.

சினிமாவையும் மிஞ்சும் அளவு உள்ள இந்த ருசிகர சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.