ஓய்வு பெற்றவர்களுக்கான கிராமம்: உலகளாவிய ரீதியில் இந்த பெயர்களுக்கு தடை

OruvanOruvan

Cannock mill village

'கேனாக் மில்' கிராமம்

பிரிட்டனில் ஓய்வுபெற்றவர்கள் அனைவரும் சேர்ந்து 'கேனாக் மில்' என்ற கிராமத்தை வடிவமைத்துள்ளனர்.

இந்த கிராமத்தை வடிவமைத்தவர் ஆன் தோர்ன் எனும் கட்டிடக் கலைஞர்.

லண்டன் வாழ்க்கை முறையால், தான் சோர்ந்து போய்விட்டதால் ஓய்வுக்குப் பின்னர் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்பியுள்ளார் ஆன் தோர்ன். அதற்கான இடமாகவே இந்த கேனாக் மில் கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.

OruvanOruvan

Cannock mill village

கடந்த 2006ஆம் ஆண்டு தனது நண்பர்கள் அனைவரையும் அழைத்து, 1.2 மில்லியன் டாலர்களுக்கு இந்த நிலத்தை வாங்கியுள்ளார். இப்போது இதுவொரு முழுமையான ஓய்வுபெற்றவர்களின் கிராமமாகவே மாறிவிட்டது.

இங்கு வசிப்பவர்கள், சேர்ந்து உணவு சமைப்பார்கள், நடனமாடுவார்கள், பாடல்கள் கேட்கிறார்கள்.

தேனீ வளர்த்தல், மண்பாண்டம் தயாரித்தல் என்பன இங்குள்ள மக்களின் தொழிலாக உள்ளது.

OruvanOruvan

Cannock mill village

OruvanOruvan

Cannock mill village

இந்தப் பெயர்கள் வைக்கத் தடை!

குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது ஒரு முக்கியமான விடயம். ஏனென்றால் அந்தக் குழந்தை வளர்ந்து இறக்கும் வரையில் அந்தப் பெயரில்தான் அழைக்கப்படும்.

அந்த வகையில் ஒரு சில நாடுகளில் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதற்கு சில தடைகள் உள்ளன.

எந்தெந்த நாடுகளில் குழந்தைகளுக்கு பெயர் வைக்க கட்டுப்பாடுகள் இருக்கிறதென பார்ப்போம்.

OruvanOruvan

Birth name

அமெரிக்கா

அமெரிக்காவின் பிறப்புச் சான்றிதழின்படி இயேசு, ராஜா, ராணி, இயேசு கிறிஸ்து, சாண்டா க்ளாஸ், அடால்ஃப் ஹிட்லர், மெசியா போன்ற பெயர்களை வைப்பதற்கு தடையுள்ளது.

பிரிட்டன்

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்கள் தனி நபரையோ அல்லது ஒரு தரப்பினரையோ புண்படுத்தும் விதமாக இருக்கக்கூடாது. எண்கள் அல்லது குறியீடாக இருந்தால் பெயர்களுக்கு பின்னால் II அல்லது III பயன்படுத்தலாம்.

உலகளாவிய ரீதியில் தடைசெய்யப்பட்ட பெயர்கள்

இஸ்லாம், ரோபோகாப், சாரா, பிரின்ஸ் வில்லியம், டெவில், தலுலா ஹவாய், சீஃப் மேக்சிமஸ், செக்ஸ் ஃபுரூட், தோர், டாம், கிரீஸ்மேன், கேமில்லா போன்ற பெயர்களை வைக்கக்கூடாது.