"கிராமி" விருது கோப்பையில் மது அருந்திய பிரபல பாடகர்: சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ

OruvanOruvan

Jay-Z drinks alcohol out of his Grammy Award moments after winning in viral video

இசைத்துறையின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் கிராமி விருது விழாவில், டாக்டர் டிரே குளோபல் இம்பாக்ட் விருதைப் வென்ற அமெரிக்கா ராப் இசைக் கலைஞர் “ஜெய் இசட்” தனது விருது கோப்பையில் மது அருந்திய வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இசைக் கலைஞர்களை கௌவுரவிக்கும் விதமாக, அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இசைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் இதில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த முறையில் பங்காற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

இதன் 66ஆவது விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமாக நேற்று நடைபெற்றது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் கலந்துகொண்ட, இந்த விழாவில் அமெரிக்கா ராப் இசைக் கலைஞரான ஜெய் இசட்டுக்கு இசைத் துறையில் தனிப்பட்ட மற்றும் தொழில் முறை சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இம்பாக்ட் விருது வழங்கப்பட்டது. விருதை மகள் புளு ஜவியை மேடையில் அழைத்து சென்று பெற்றுக் கொண்டார்.

சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ

விருதை பெற்ற மகிழ்ச்சியில் ஜெய் இசட் மேடையில் இருந்து கீழே வந்து தனது சக நண்பர்களுடன் விருதை கொண்டாடும் வகையில் தான் பெற்றுக் கொண்ட விருது கோப்பையில் மது ஊற்றி அருந்தியுள்ளார்.

அவர் உயரிய விருது கோப்பையில் மது அருந்தியது திரையுலகம் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பலரும் இது குறித்து “ஜெய் இசட்” விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.