“என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்“: தன் பாணியில் நன்றி கூறிய இளைய தளபதி

OruvanOruvan

Actor vijay

அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில்,

"தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்" அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள்." என தனது அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் விஜய் கடந்த வெள்ளிக்கிழமை புதிய கட்சியை ஆரம்பித்தார்.