அனைவரையும் அண்ணார்ந்து பார்க்க வைக்கும் குடியிருப்பு: அசத்தும் சீனாவின் கட்டுமானம்
சீனாவின் கட்டுமானங்கள் என்றுமே வித்தியாசமானதும் தனித்துவமானதுமாக காணப்படும். அதற்கு உதாரணமாக, சீனாவின் ஹாங்சோவில் உள்ள கியான்ஜியாங் செஞ்சுரி சிட்டியில் கட்டப்பட்ட ரீஜண்ட் இன்டர்நேஷனல் அபார்ட்மென்டை கூறலாம்.
கடந்த 2013ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த கட்டிடம் 36 மாடிகளைக் கொண்டது. இதில் சுமார் 30,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
'S' வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்பில் மக்களுக்கு தேவையான உணவு விடுதி, நீச்சல் குளம், சலூன், அங்காடி போன்ற அனைத்து வசதிகளும் உண்டு.
சுமார் 206 மீட்டர் உயரம் கொண்ட இந்த குடியிருப்பு ஒரு நகரத்தைப் போல காட்சியளிக்கிறது.
ஆரம்பத்தில் ஹோட்டலாக இருந்த கட்டிடம் பின்னர் அடுக்குமாடி குடியிருப்பாக மாற்றப்பட்டது.