வீதியின் நடுவில் வெள்ளை, மஞ்சள் கோடுகள் ஏன் வரையப்படுகின்றன?: இதுதான் காரணம்

OruvanOruvan

Lines on road

நாம் பயணம் செய்யும்போது சாலைகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் போடப்பட்டிருப்பதை பார்த்திருப்போம்.

அதற்கான காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.

சாலைகளில் போடப்படும் கோடுகளில் சில கோடுகள், நீளமானதாகவும் சில கோடுகள் சிறியதாகவும் காணப்படும். இந்த கோடுகள் சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுப்பதற்காகவும் சாலைகளில் எவ்வாறு செல்ல வேண்டும் என்பதை அறிவுறுத்துவதற்காகவும் போடப்படும் கோடுகள்.

நீளமான வெள்ளைக் கோடு

OruvanOruvan

single white line

வீதியின் நடுவில் எந்தவொரு இடைவெளியும் இல்லாமல் நீளமான வெள்ளைக்கோடு போடப்பட்டிருந்தால், அது சாலையில் வேகமாக செல்லக்கூடாது, அதேபோல் முன்னால் செல்லும் வாகனத்தை முந்திச் செல்லக்கூடாது என்பதைக் குறிக்கும்.

இடைவெளியுடனான வெள்ளைக்கோடு

OruvanOruvan

single white line

இந்த கோட்டின் அர்த்தம், இடது புறமாக செல்லும் வாகன ஓட்டிகள், முன்னால் செல்லும் வாகனங்களை வலது புறம் கவனத்துடன் முந்திச் செல்லலாம். அதேபோல் வாகனங்கள் இடைவெளி விட்டு செல்ல வேண்டும் என்பதாகும்.

நீளமான மஞ்சள் கோடு

OruvanOruvan

single yellow line

வீதியின் நடுவில் நீளமான மஞ்சள் கோடு இருந்தால், அது வெளிச்சம் குறைவான பகுதி, அதில் வேகமாக செல்லக்கூடாது என்று அர்த்தம். அதுமட்டுமின்றி அவசரம் என்றால் மட்டும் முன்னால் செல்லும் வாகனத்தை பாதுகாப்பாக முந்திச் செல்லலாம்.

இரண்டு நீளமான மஞ்சள் கோடுகள்

OruvanOruvan

single yellow line

ஆபத்தான பகுதி என்பதையே இரண்டு நீளமான மஞ்சள் கோடுகள் பிரதிபலிக்கின்றன. இந்த சாலையில் முன்னால் செல்லும் வாகனங்களை முந்திச்செல்லக் கூடாது.