ஆரஞ்சு பழத்தை விடுங்க.. தோலை வச்சு உங்க துணை உங்களை காதலிக்கிறாரானு கண்டுபிடிச்சிடலாம்: எப்படி தெரியுமா?

OruvanOruvan

Orange Peel Theory

டிக்டாக்கில் ட்ரெண்டான ஆரஞ்சு பழத் தோல் தியரியில், உங்கள் துணை எவ்வளவு காதல் மற்றும் புரிந்துணர்வு வைத்திருக்கின்றார் என்பதை கணிக்க முடியும்.

ஆரஞ்சு பழத்தோல் தியரி என்றால் என்ன? இதன் பெயரிலேயே அர்த்தம் இருக்கிறது.

முதலில் ஆரஞ்சு பழத் தோலை உறித்து தர முடியுமா என உங்கள் துணையிடம் நீங்கள் கேட்க வேண்டும்.

OruvanOruvan

Orange Peel Theory

அவர் இதற்கு ஒத்துக்கொண்டு தோலை உறித்து தந்தால், உங்கள் மீது அவர் உண்மையிலேயே அன்பு வைத்துள்ளார் என்று அர்த்தம்.

ஒருவேளை அவர் இதற்கு மறுத்தால், உங்கள் உணர்வுகளை அவர் புரிந்துகொள்வதேயில்லை என அர்த்தமாம்.

இதைப் பார்ப்பதற்கு வேடிக்கையான விளையாட்டு போல் இருக்கலாம். ஆனால் இதன் பின்னால் உள்ள முக்கியமான அம்சம் என்னவென்றால், உங்கள் துணைவர் உங்களுக்காக சிறிய உதவியை கூட செய்கிறார் என்றால், உங்கள் இருவருக்கும் இடையே ஆரோக்கியமான உறவுமுறை இருப்பதையே இது எடுத்துரைக்கிறது.

உங்களை ஒருவர் இந்த ஆரஞ்சு பழத் தோலை உறித்து தர முடியுமா என கேட்டால், இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? இதை நீங்களே செய்யலாமே.

எதற்கு என்னை அழைக்கிறீர்கள் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இது வெறும் ஆரஞ்சு பழத் தோல் உறிக்கும் விஷயம் அல்ல என்பதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

OruvanOruvan

Orange Peel Theory

விளையாட்டு வினையாகும்

உங்கள் பதில் என்னவாக இருக்கும் என்று பார்க்கவே, இந்த சின்ன உதவியை துணை உங்களிடம் கேட்கிறார்கள். இதை வைத்துதான் அவர்கள் உங்களிடம் பெரிய உதவியை கேட்கலாமா வேண்டாமா என முடிவு செய்வார்கள்.

இந்த ஆரஞ்சு பழத் தோல் தியரி சம்மந்தமாக பல வீடியோக்களை இணையத்தில் பார்க்க முடிகிறது.

ஆனால் ஒரு விஷயத்தை நாம் கவனமாக தெரிந்துகொள்ள வேண்டும். இந்த ஆரஞ்சு பழத் தோல் தியரியை நாம் சீரியஸாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

உங்கள் துணையின் அன்பை தெரிந்துகொள்ள இது சரியான வழிமுறை அல்ல.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தங்கள் அன்பை வெளிப்படுத்துவார்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

உங்கள் துணை நீங்கள் கேட்கும் போது ஆரஞ்சு பழத் தோலை உறிக்க முடியாது எனக் கூறினால், ஒருவேளை அவர் களைப்பில் இருந்திருக்கலாம்.

ஆகையால் இந்த ஆரஞ்சு பழத் தியரி விளையாட்டுத்தனமாக தெரிந்தாலும் ஒருவரின் அன்பை மதிப்பிட இது சரியான வழியல்ல. விளையாட்டு வினையாக வாய்ப்பு உள்ளது என்பதால், நேரம் பார்த்து விளையாடுங்கள்.