மலைகிராமத்துக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக்கொடுத்த பாலா: குவியும் பாராட்டுக்கள்

OruvanOruvan

KPY Bala

கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாலா.

இவர் தனது சொந்த செலவில் மக்களுக்காக இதுவரையில் நான்கு ஆம்புலன்ஸ்கள் வாங்கிக் கொடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது வாணியம்பாடி அருகில் உள்ள ஒரு மலைகிராமத்துக்கு 5ஆவது ஆம்புலன்ஸை வாங்கிக் கொடுத்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் இந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் பிரசவ வலியால் துடித்துள்ளார். இங்கே சரியான சாலை வசதி இல்லாத காரணத்தினால் 7 கிலோமீட்டர் டோலியில் உட்கார வைத்து அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதனை அறிந்த பாலா, அந்த கிராமத்துக்கு ஒரு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்துள்ளார்.

“என்னிடம் பணம் இருந்திருந்தால் வீதியை செய்து கொடுத்திருப்பேன். ஆனால், பணம் இல்லாத காரணத்தினால் ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்துள்ளேன்“ எனக் கூறியுள்ளார்.

பாலாவின் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.