“ஹனுமான்” பார்த்து சாமி வந்து தலைகீழாக புரண்டு ஆடிய பெண்: டிரெண்டாகும் வீடியோ

OruvanOruvan

Hanuman Effect

ஹனுமான் திரைப்படத்தை பார்த்த ரசிகை ஒருவர் திரையரங்கில் சாமி வந்து ஆடிய வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.

அந்த பெண்மணியை சமாதானம் செய்ய ரசிகர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் முயல்வது மற்றும் ஹனுமானே வந்து விட்டார் என ரசிகர்கள் கையெடுத்துக் கும்பிடுவது உள்ளிட்ட சுவாரஷ்ய சம்பவங்கள் அரங்கேரியுள்ளது.

கோயில்களில் பக்தி பாடல் ஒலிக்க ஆரம்பித்தாலே பல பெண்களுக்கு சாமி வந்துவிடும்.

ஆனால், திரையரங்குகளில் இதுபோன்ற நிகழ்வுகள் அரிதான ஒன்றாக இருந்து வரும் நிலையில், ஹனுமான் படத்தை பார்த்து விட்டு பெண் ஒருவர் திரையரங்கில் சாமி வந்து ஆட்டம் போட்டுள்ளார்.

வசூல் வேட்டை செய்யும் ஹனுமான்

பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, அம்ரிதா, வரலட்சுமி சரத்குமார் மற்றும் வினய் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஹனுமான் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.

சூப்பர் ஹீரோ மற்றும் ராமாயணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் ஆஞ்சநேய பக்தர்களின் விருப்பப்படமாக மாறி வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.

வெறும் 20 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியுள்ளது.

இந்த நிலையில், படம் பார்க்க சென்ற பெண் ரசிகை சாமி வந்து ஆடி திரையரங்கினை அதிர வைத்துள்ளார். இதனை ரசிகர்கள் தற்போது ட்ரெண்டாக்கியுள்ளனர்.