விமானங்கள் பறக்கும்போது வானத்தில் வெள்ளை கோடு தெரியுதே: ஏன் தெரியுமா? அட இது தெரியாம போச்சே

OruvanOruvan

White lines

வானத்தில் ஒரு சில விமானங்கள் பறக்கும் போது மட்டும் வெள்ளை நிறத்தில் புகை போல கோடு தெரிவதை பார்த்து ரசித்திருப்போம்.

விமானம் பறக்கும் சத்தம் கேட்டாலே 90 கிட்ஸ்ள் அண்ணாந்து வேடிக்கை பார்க்காமல் இருந்து இருக்கவே மாட்டார்கள். அந்த பழக்கம் தற்போது கூட சிலருக்கு இருக்கிறது.

ஒரு காலத்தில் பெரும் பணக்காரர்கள் மட்டுமே பயணம் செய்து வந்த விமானங்கள் தற்போது மத்திய தர வர்க்கத்தினர் கூட பயணிக்கும் அளவுக்கு வந்து விட்டது.

வானத்தில் விமானம் செல்லும் போது புகை போல ஒரு தடத்தை உருவாக்கி செல்லும் இதை அனைவருமே பார்த்து இருக்கலாம்.

OruvanOruvan

White lines

ஆனால் உண்மையில் அது புகை இல்லை.

அது வெறும் நீராவி, நீராவி தான் இப்படி வெள்ளை நிற பாதையை உருவாக்குகிறதாம். விமானம் காற்றில் இருக்கும் போது, என்ஜின் குறிப்பிட்ட அளவு நீரை உற்பத்தி செய்வதோடு அதை வெளியிடவும் செய்யும்.

நீராவியாக இந்த நீர் வெளியேற்றப்படும் போது பல அடி உயரத்தில் உள்ள குளிர்ச்சியான காற்றில் பரவுகிறது.

குளிர்ச்சியான இடத்தில் வெளியேறும் இந்த நீராவி அப்படியே உறைந்து வளிமண்டலத்தில் ஒடுங்கும். இந்த பனிதுளிகளை தான் நாம் இவ்வளவு நாள் புகை என்று நினைத்துகொண்டு இருக்கிறோம்.

இதுவே விமானத்தின் பின்பகுதியில் நீளமான வெள்ளை மேகங்களாக காட்சி அளிக்கிறதாம். அதுமட்டும் இல்லை, குளிர்ச்சியான சூழல் இல்லாதபோது இதுபோன்ற வெள்ளை பனிதுளிக்கள் ஏற்படாது என்பதும் ஆச்சரியப்பட வேண்டிய உண்மை.

OruvanOruvan

White lines