பயணிப்பதே பறந்துதான்!: ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி விமானம்

OruvanOruvan

Cameron Airpark Village

வீட்டுக்கு ஒரு கார், பைக் வைத்திருப்பது இயல்பான ஒரு விடயம். ஆனால், வீட்டுக்கு ஒரு விமானம் வைத்திருக்கும் நகரத்தைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கேமரான் ஏர்பார்க் என்ற சிறிய கிராமமொன்றில் பணிக்குச் செல்லவும் அல்லது வேறு தேவைகளுக்காக வெளியில் செல்லவும் மக்கள் விமானங்களைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

விமானம் ஓட்டுவதற்கான அனுமதிப்பத்திரம், விமானத்தை இயக்குவது பற்றிய முழு விபரம் தெரிந்தவர்களை தவிர வேறு யாருக்கும் விமானத்தை இயக்க அதிகாரம் இல்லை.

OruvanOruvan

Cameron Airpark Village

இங்குள்ள மக்கள் பெரும்பாலும் ஓய்வுபெற்ற இராணுவ விமானிகளாக இருக்கின்றனர். வெகு சிலரே வழக்கறிஞர்கள், மருத்துவர்களாக இருக்கின்றனர்.

கடந்த 1963ஆம் ஆண்டில் கட்டப்பட்டதே இந்த கமரூன் ஏர்பார்க். இங்கே மொத்தம் 124 வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டுக்கும் விமானத்தை நிறுத்தி வைக்கும் அளவில் 100 அடி அகலத்துக்கு வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் உலகப்போருக்கு பின்பே ஓய்வுபெற்ற இராணுவ விமானிகளுக்கான குடியிருப்பு விமானப் பூங்காவாக இந்த கிராமத்தை அந்நாட்டின் விமானப் போக்குவரத்து ஆணையம் மாற்றியது.

OruvanOruvan

Cameron Airpark Village