மாப்பிள்ளை இப்படித்தான் இருக்க வேண்டும்!: நான்காவது திருமணம் குறித்து மனம் திறந்த வனிதா

OruvanOruvan

Vanitha Vijaykumar

அவ்வப்போது திருமண சர்ச்சையில் சிக்குபவர்தான் நடிகை வனிதா. இந்நிலையில் தனது நான்காவது திருமணம் குறித்து ஒரு விடயத்தை பகிர்ந்துள்ளார்.

ஏற்கனவே இரண்டு பேரை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற வனிதா, மூன்றாவதாக பீட்டர் போலை திருமணம் செய்தார். ஆனால், அந்த வாழ்க்கையும் நிலைக்கவில்லை.

இவ்வாறிருக்க, அண்மையில் பேட்டியொன்றில் பேசிய வனிதாவிடம், தொகுப்பாளர் திருமணம் பற்றி கேட்க,“நான்காம் திருமணம் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

அதற்கு தொகுப்பாளர், “மாப்பிள்ளை கருப்பா இருக்கணுமா? சிவப்பாக இருக்கணுமா?” என கேட்டதற்கு, “பச்சையாக இருக்கணும். குபேரன் போல பச்சையாக இருக்கணும். அப்படிப்பட்ட ஒருவரைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்” என பதிலளித்துள்ளார்.

OruvanOruvan

Vanitha Vijaykumar