”ஒளியிலே தெரிவது தேவதையா” பாடலுடன் நெகிழ வைத்த கில்மிஷா: காற்றில் கலந்த இசைஞானியின் மகளுக்கு ஈழத்து இசைக்குயில் இரங்கள்

OruvanOruvan

Kilmisha

இசைஞானி இளையராஜா மகள் பவதாரிணியின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று ஈழத்து குயில் கில்மிஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.

கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த இளையராஜாவின் மகள் பவதாரிணி, நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் நேற்று மதியம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கிருந்து தியாகராய நகரில் உள்ள இளையராஜா வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்ட உடல், பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இந்நிலையில், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், பவதாரிணி பாடிய ”ஒளியிலே தெரிவது தேவதையா” பாடலுடன் கில்மிஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.