தலைகீழாகத்தான் குதிக்கப் போகிறேன்: மைதானத்தில் மேற்கிந்தியத்தீவுகள் வீரர் அந்தர் பல்டி

OruvanOruvan

Kevin Sinclair stunned the world with his celebration (Image: Getty)

மேற்கிந்தியத்தீவுகள் - அவுஸ்திரேலியா இடையேயான பிங்க்-பால் டெஸ்டில் கெவின் சின்க்ளேர் ஒரு பிரம்மாண்டமான கொண்டாட்டத்தை நடத்தி கிரிக்கெட் உலகை திகைக்க வைத்தார்.

அவுஸ்திரேலியா - மேற்கிந்தியத்தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் முதல் இன்னிங்ஸில் 311 ஓட்டங்களை குவித்தது.

அதையடுத்து தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 289 மட்டும் எடுத்தது.

இந்த இன்னிங்ஸில் அஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவஜாவின் விக்கெட்டை, மேற்கிந்திய தீவுகள் அணியின் அறிமுக வீரர் கெவின் சின்க்ளேர் வீழ்த்தினார்.

இது சர்வதேச டெஸ்ட் போட்டியில் அவரது முதல் விக்கெட்.

இதனைக் கொண்டாடும் விதமாக அவர் மைதானத்தில் தலைகீழாக குட்டிக்கரணம் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதனை மைதானத்தில் இருந்த கிரிக்கெட் ரசிகர்கள், வர்ணனையாளர்களான மைக்கேல் வாகன், இயன் ஸ்மித் மற்றும் ஆலன் பார்டர் ஆகியோர் கெவின் சின்க்ளேரின் கொண்டாட்டத்தைப் பார்த்து வியந்தனர்.

தற்சமயம் சமூக வலைத்தளங்களிலும் அந்த காணொளி வைரல் ஆகியுள்ளது.