மகள் கலங்க.. தட்டிக்கொடுத்து பாடிய இளையராஜா: நெஞ்சை ரணமாக்கிய வீடியோ
பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி பித்தப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.
அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கும் சூழலில் அவரும் இளையராஜாவும் மேடையில் ஒன்றாக பாடிய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
அதாவது, இளையராஜா இசையமைத்த ராஜாவின் ரமண மாலையில் 'ஆராவமுதே' என்ற பாடலை இளையராஜாவும், பவதாரிணியும் சேர்ந்து ஒரு மேடையில் பாடுகிறார்கள்.
கேட்பவரை ஆட்கொள்ளும் வகையில் ராஜா அந்தப் பாடலை இசையமைத்திருப்பார். அந்தப் பாடலின் சரணத்தை பாடும்போது பவதாரிணி தேம்பி தேம்பி அழுகிறார்.
அதை கவனித்த இளையராஜா பவதாரிணியின் முதுகில் தட்டிக்கொடுத்து அவரை தேற்றிவிட்டு தானும் பாடுகிறார். இந்த வீடியோ பார்க்கும்போது இப்போது கண்கள் கலங்குகின்றன என்றும், பவதாரிணியை இளையராஜா தேற்றிவிட்டார்; இளையராஜாவை யார் தேற்றுவார் என ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.