கண் திறந்து சிரிக்கும் அயோத்தி பால ராமர்: சிலிர்த்து போக வைத்த AI
அயோத்தியில் எழுந்தருளியிருக்கும் பால ராமர் கண் திறந்து புண்ணகைப்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி பக்தர்களை சிலிர்க்க வைத்துள்ளது.
இதனை பார்த்த பக்தர்கள் பால் வடியும் முகத்த பாரு’, ‘பச்சை குழந்தை சிரிப்ப பாரு’ என இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அயோத்தி ராமர் கோயிலில் பால ராமர் சிலை பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில் நேற்று முன்தினம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தொடர்ந்து பால ராமர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்தச் சூழலில், அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பால ராமர் தனது கண்களை சிமிட்டுவது போலவும், முக பாவனைகளை மேற்கொள்ளும் வகையிலும் வீடியோ ஒன்று உருவாக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இந்த வீடியோ பார்க்க அப்படியே பால ராமர் உயிர்தெழுந்து வந்தது போல உள்ளது.
பால ராமருக்கு உயிர் கொடுத்த ஏஐ
கடந்த வருட இறுதியில் நாம் அடைந்த மிகப் பெரிய வளர்ச்சி என்றால் அது ஏஐ துறையில் தான்.
பல ஆண்டுகளாகவே ஏஐ குறித்த ஆய்வுகள் நடந்து வந்தாலும் கூட சாட் ஜிபிடியின் வெற்றி அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டது.
ஏஐ மூலம் சமூகத்திற்கு நன்மை என்று மட்டும் சொல்லிவிட முடியாது. இதனால் மோசமான விளைவுகளும் கூட ஏற்படவே செய்கிறது.
ஏஐ மூலம் நடிகைகள் சிலரது ஆபாச வீடியோக்கள் எடிட் செய்து பரப்பப்பட்டு வந்தது. அண்மைய நாட்களாக ஏஐ பயன்பாடு சார்ந்த அச்சுறுத்தல் நிலவி வரும் சூழலில், பால ராமர் சிரிக்கும் வீடியோ நல்ல விமர்சனங்களை பெற்றுவருகின்றது.