கிரிக்கெட்டில் சாதிக்கும் விக்ராந்த்தின் மகன்! இது வெறும் ஆரம்பம் தான்: தந்தையாக பெருமை
நடிகர் விக்ராந்தின் மகன் யஷ்வந்த் தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் இடம்பிடித்திருக்கும் செய்திகள் இணையத்தினை ஆக்கிரமித்த வண்ணம் உள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் விக்ராந்த் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கும் லால்சலாம் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
விக்ராந்த் நடிகர் மட்டுமின்றி சிறந்த கிரிக்கெட் வீரரும் ஆவார்.
கடந்த 1991இல் வெளிவந்த ”அழகன்” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த இவருக்கு, 2005 இல் வெளிவந்த ”கசடதபற” என்ற படத்தின் மூலம் கதாநாயகமான அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.
நீண்ட நாட்களாக விக்ராந்த் சினிமாவில் இருந்தாலும் அவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்தும் படங்கள் பெரிதாக அமையவில்லை. இவர் பிரபல சீரியல் நடிகை மானசா என்பவரை திருமணம் செய்து கொண்டார். விக்ராந்திற்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் யஷ்வந்த் என்பவர் 14 வயதுக்கு உட்பட்ட தமிழக கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ளார்.
தமிழ்நாடு அணியில் விக்ராந்த் மகன்
செலிபிரட்டிஸ் கிரிக்கெட் லீக்கில் தமிழ் திரையுலகினருக்காக பல தொடர்களில் அசத்தலான ஆட்டத்தை யஷ்வந்த் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு மாநிலத்தின் 14 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்கு விக்ராந்த் மகன் யஷ்வந்த் தேர்வாகியுள்ளார். இதை நடிகர் விக்ராந்தே தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தந்தையாக பெருமை
அவர் பதிவிட்டுள்ளதாவது, “ஒரு தந்தையாக மிகவும் மகிழ்ச்சியான நாள். உன்னை நினைத்து இதைவிட பெருமைப்பட முடியாது. 14 வயதுக்குட்பட்ட தமிழ்நாடு அணி உன் நீண்ட பயணத்தின் முதல் படி. உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துகள். கடவுளுக்கு நன்றி.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.