வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய சாய் பல்லவியின் தங்கை பூஜா: இணையத்தினை ஆக்கிரமித்த புகைப்படங்கள்

OruvanOruvan

Sister of Sai Pallavi Pooja introduced her lover in Instagram

நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய காதலரை அறிமுகப்படுத்தி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

'சித்திரை செவ்வானம்' என்ற படத்தில் நடித்து சினிமாவில் நுழைந்த பூஜா, தொடர்ந்து படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரே படத்துடன் திரையுலகில் இருந்து ஒதுங்கினார்.

இந்நிலையில்,'இதுநாள் வரையில் தனது க்ரைம் பார்ட்னராக இருந்த வினீத் விரைவில் தன்னுடைய லைஃப் பார்ட்னராக மாறவுள்ளதாக பூஜா கண்ணன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் குறித்து அறிவித்துள்ளார்.

அத்துடன் வினீத் உடன் இருக்கும் புகைப்படங்களையும் தனது பதிவுடன் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.