கண்ணீருடன் பூர்ணிமா போட்ட பதிவு: மீம்ஸ் போட்டு கலாய்த்து தள்ளிய இணையவாசிகள்

OruvanOruvan

Bigg Boss Poornima Ravi

பிக் பாஸ் பூர்ணிமா போட்ட பதிவை பார்த்து இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.

அவர் வெளியிட்ட பதிவில்,

"ஒரு வழியாக எல்லாம் முடிந்துவிட்டது. உங்கள் அன்பும், ஆதரவும் என் மனதை நெகிழ வைக்கின்றது. உங்களின் அளவு கடந்த அன்புக்கும், ஆதரவுக்கும் நான் எந்த அளவுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்பதை என் செயல்கள் நிரூபிக்கட்டும். டேக் கேர்ங்க. கண்ணீருடன் பூர்ணிமா ரவி" என தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், இப்பொழுது கூட பிக் பாஸ் வீட்டில் நீங்கள் செய்த தவறுகள் எதையும் உணரவில்லை. மன்னிப்பு கேட்க வேண்டும் என உங்களுக்கு தோன்றவில்லை.

உங்களின் அன்பும், ஆதரவும் என மனதை நெகிழ வைக்கிறதா என்று கூறி மீம்ஸ் போட்டு சிலர் கலாய்த்து வருகின்றனர்.