மணியின் வார்த்தைகளால் உடைந்து போன ரவீணா: வெளியான மூன்றாவது ப்ரோமோ

OruvanOruvan

Bigg Boss Tamil Season 7 | 12th January 2024 - Promo 3

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோவில் மணி மற்றும் ரவீணாவின் காட்சிகள் காண்பிக்கப்படுகிறது.

ரவீணா ஆசையாக பேச வர மணி முகத்தை திருப்பிக் கொள்கிறார், அதை பார்த்து ரவீணா கவலையடையும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.

ஆனால், அந்த காதல் பிரச்சினையை பார்த்தால் நிஜ பிரச்சினை போன்று தெரியவில்லை.

நான் வந்து பேச வருவது போன்று வருகிறேன், நீ கோபப்பட்டு போவது போன்று போய்விடு.

இதை பார்த்தால் பார்வையாளர்களின் ஓட்டு கிடைக்கும் என மணியிடம் சொல்லி வைத்து ரவீணா நடந்து கொண்டதாகவே பார்வையாளர் கூறி வருகின்றனர். இன்று இரவு பார்க்கலாம் முழுமையாக என்ன நடந்தது என்பதை.