போட்டியிலிருந்து வெளியேற தயாராகும் விஸ்னு!: இரு சீனி பக்கெட்டுக்களை தெரியாமல் எடுத்து மாட்டிக்கொண்டார்

OruvanOruvan

Big Boss Season 7 promo

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி துவங்கி விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்த சீசனின் சண்டைகளுக்கு பஞ்சமே இல்லை. ஆரம்பம் முதலே சண்டைகள் களைக்கட்ட துவங்கி விட்டன.

அதேபோல் இன்றும் சண்டை ஒன்று ஏற்படப்போவதை உறுதி செய்தவாறு ப்ரமோ ஒன்று வெளியாகியுள்ளது.

குறித்த ப்ரமோவில் இந்த வாரத்திற்கான சோப்பிங் அலட்ர் அடித்தவுடன் கூல் சுரேஸ் மற்றும் விஸ்ணு ஆகியோர் தேவையான உணவுப்பொதிகளை எடுக்கின்றனர்.

அதில் சீனியை எடுக்க மறந்து போன விஸ்னு, பசர் அடித்ததன் பின் தெரியாமல் இரண்டு பக்கெட்டுக்களை எடுக்கின்றார்.

ஆனால் அதை கவனித்த பிக்பாஸ் “என்ன விஸ்னு தெரியாமல் எடுக்கின்றீர்களா?“ என கேட்கவே இரண்டு பக்கெட்தான் என கூறுகின்றார்...

தொடர்ந்து சீனி எடுக்காமையினால் ஏற்படுப்போகும் பிர்ச்சினை பற்றி கூல் சுரேஸூம் விஸ்னுவும் பேசுவது தொடர்பில் காண்பிக்கப்படுகின்றது.