எங்கும் நசுக்கப்படுவது தான் ஏழ்மை: நடிகர் போஸ் வெங்கட் வேதனை: சிறு திரைப்படங்களை தடுப்பது என்பது ஒரு விதமான பாசிச மனப்பான்மை - போஸ் வெங்கட்.

OruvanOruvan

Bose Venkat

100 கோடிக்கு மேல் பணம் இரைத்து தவறான படங்களை ஏன் எடுக்கிறீர்கள் என்று கேட்க ஆள் இல்லை என நடிகர் போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார்.

நடிகரும், இயக்குனருமான போஸ் வெங்கட் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், எங்கும் நசுக்கப்படுவது தான் ஏழ்மை.

இங்கு 100 கோடிக்கு மேல் பணம் இரைத்து தவறான படங்களை ஏன் எடுக்கிறீர்கள் என்று கேட்க ஆள் இல்லை.

மக்களுக்கு பிரயோஜனமான தேவையான அவசியமான திரைப்படங்களை எடுக்கும் கார்ப்பரேட்டுகளை கேள்வி கேட்பதில்லை.

பணத்தை கருத்தில் கொள்ளாமல் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு வரும் தயாரிப்பாளர்களை தடுத்து நிறுத்துவது, இங்கு இருக்ககூடிய ஏற்றத்தாழ்வு, சாதியக்கொடுமை, மன ரீதியான பிரச்சினைகள் ஆகியவற்றை சினிமாக்களாக அறிவுரைகளாக அக்கறையுடன் சொல்லும் அருமையான சிறு திரைப்படங்களை தடுப்பது என்பது ஒரு விதமான பாசிச மனப்பான்மை.

நல்ல படங்களை தடுப்பது என்பது நம் தமிழ் சினிமாவிற்கு நாமே நம் தலையில் மண்ணள்ளி கொட்டுவதற்கு சமம் என தெரிவித்துள்ளார்.