புதிய குஷியில் மணிரத்னத்தின் படைப்புகள்? - ஒளிந்திருக்கும் சுவாரஸ்யம்: இந்த பாடசாலை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியிருப்பார். இதில் என்ன சுவாரஸ்யம் என்று யோசிக்கின்றீர்களா?

OruvanOruvan

ean roja song

பொதுவாகவே சினிமா பாடல்கள் என்றாலே அதன் வரிகள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு தாக்கத்தை செலுத்தியிருக்கும்.

தெலுங்கின் பிரம்மாண்ட படத்தயாரிப்பு நிறுவனமான மைதிரி மூவி மேக்கர்ஸின் அடுத்த படைப்பு ’குஷி’.

விஜய் தேவரகொண்டா - சமந்தா ஜோடியாக நடித்திருக்கும் இந்த திரைப்படம் செப்டம்பர் 1 அன்று, தமிழ், தெலுங்கு மட்டுமன்றி கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியிலும் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற “என் ரோஜா நீயா” இந்த பாடலில் ஒளிந்திருக்கும் சுவாரஸ்யம் தெரியுமா?

இந்த பாடசாலை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியிருப்பார். இதில் என்ன சுவாரஸ்யம் என்று யோசிக்கின்றீர்களா?

அந்த பாடல் வரிகள் முழுவதும் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல், நேரடியாக இயக்குனர் அவதாரம் எடுத்த மணிரத்னத்தின் படங்களில் பெயர்களை கொண்டு அமைந்திருக்கின்றது.

என் ரோஜா நீயா?

என் உயிரே நீயா?

என் அஞ்சலி நீயா?

கீதாஞ்சலி நீயா?

என் கடலில் அலை பாயும்

ஓர் மௌன ராகம் நீதானே

காற்று வெளியிடை எல்லாம்

நாம் இருவர் பறந்து செல்லத்தானே

நான் நாயகன் ஆனால்

என் நாயகி நீதானே

நான் இராவணன் ஆனால்

என் ஈழமே நீதானே (கண்ணத்தில் முத்தமிட்டால்)

ஹே ஊனாளும் ஊ சொல்லு

ஊ-ஊ நாளும் ஊ சொல்லு

ஓகே கண்மணியே... என பாடல் தொடர்ந்து செல்கின்றது.

தற்போது இந்த பாடல் இளசுகளின் வாயில் முணுமுணுக்கும் ஒரு பாடலாக மாறிவருகின்றது.

ஆனால் 'குஷி' என்றதுமே விஜய் - ஜோதிகா நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்திலான திரைப்படமே தமிழ் ரசிகர்களின் நினைவிலாடும்.

அந்த வெற்றித் திரைப்படத்துக்கு புதிய குஷி ஈடுகொடுக்குமா என்பது விரைவில் தெரிந்து விடும்.

'குஷி' திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா - சமந்தாவுடன் ஜெயராம், முரளி ஷர்மா, லக்‌ஷ்மி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, சரண்யா பிரதீப் உள்ளிட்டோர் உடன் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரைப்படத்தை இயக்கி உள்ளார் ஷிவா நிர்வாணா என்பதும் குறிப்பிடத்தக்கது.