களைகட்டும் மலேசியா! யுவன் கச்சேரியில் இசை மழையில் நனைய வைத்த சிம்பு (Video): 12 ஆண்டுகளுக்கு பிறகு சிலம்பரசன் மலேசியாவில் நடக்கும் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

OruvanOruvan

SilambarasanTR

மலேசியாவில் யுவன் சங்கர் ராஜாவும், சிம்புவும் இணைந்து High On U 1 இசைநிகழ்ச்சியில் பல பாடல்களை பாடி ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து கொத்துவருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா திகழ்ந்து வருகின்றார்.

இவரது இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். இவருடன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிலம்பரசனும் தற்போது இணைந்துள்ளார்.

இருவரும் ஹை ஆன் யுவன் (High on U1) என்ற இசை நிகழ்ச்சிக்காக ஒன்று சேர்ந்துள்ளனர்.

இந்நிகழ்ச்சி மலேசியாவில் இன்று பிரம்மாண்டமாக நடந்து வருகின்றது.

இதில் நடிகர் சிலம்பரசன் பாட்டு பாடி கொண்டே நடனமாடியிருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இதேவேளை, சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு சிலம்பரசன் மலேசியாவில் நடக்கும் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதால் ஹை ஆன் யுவன் நிகழ்ச்சி அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

இது குறித்த காணொளிகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகின்றது.