குழந்தையின் பெயரை வெளியிட்ட அட்லீ - ப்ரியா தம்பதி! கையில் ஏந்தி கொஞ்சிய புகைப்படம்: குழந்தையின் பெயரை அட்லீ - ப்ரியா தம்பதி வெளியிட்டுள்ளனர்.

OruvanOruvan

Atlee - Priya Photo Credit: Priyaatlee Twitter

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ளவர் அட்லீ.

இவர் தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற இந்தி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இத்திரைப்படம் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி வெளியாகிறது.

அட்லீ - ப்ரியா தம்பதிக்கு கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் குழந்தையின் பெயரை அட்லீ - ப்ரியா தம்பதி வெளியிட்டுள்ளனர்.

அதன்படி குழந்தைக்கு ”மீர்” (Meer) என பெயரிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

இதோடு அட்லி அருகில் இருக்க குழந்தையை ப்ரியா கையில் ஏந்தியிருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.