ஒக்டோபஸ் குஞ்சு பொரிக்கும் மிக அரிய காட்சி (VIDEO): ஒக்டோபஸ் ஒரு முறை இனப்பெருக்கத்தில் ஈடுபட்டால், அதற்குப் பின் ஆண் ஆக்டோபஸ்கள் அதிகபட்சம் சில மாதங்களே உயிர்வாழும்.
ஆச்சரியங்களும், அதிசயங்களும் நிறைந்த இந்த பூமியில் அனைத்தையும் எம்மால் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
பறவைகள், மிருகங்கள் இனப்பெருக்கம் செய்யும் காட்சிகளை நாம் சமூக ஊடகங்களில் பார்த்திருப்போம்.
எனினும், கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்யும் நிகழ்வுகளை காண்பது என்பது அரிதான விடயம்.
கடல்வாழ் உயிரினமான ஒக்டோபஸ் குஞ்சு பொரிக்கும் அரிய காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஒக்டோபஸ் பெரும்பாலும் கடல்களையும், கடற்பரப்புகளையும் உறைவிடமாகக் கொண்டிருக்கும்.
ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட ஒக்டோபஸ் வகைகள் உண்டு. ஆச்சரியமான உண்மை என்னவென்றால் குஞ்சு பொரித்த பிறகு பெண் ஒக்டோபஸ் ஒரு சில நாட்களே உயிர் வாழும்.
ஒக்டோபஸ் ஒரு முறை இனப்பெருக்கத்தில் ஈடுபட்டால், அதற்குப் பின் ஆண் ஒக்டோபஸ் அதிகபட்சம் சில மாதங்களே உயிர்வாழும்.
ஒரு பெண் ஒக்டோபஸ் 4,00,000 முட்டைகள் வரை இடும். அந்த முட்டைகள் பொரிய ஐந்து மாதங்கள் எடுக்கும்.
மேலும், முட்டைகள் பொரியும் வரை பெண் ஒக்டோபஸ் இரவு பகல் பாராமல் முட்டைகளைப் பாதுகாக்கும்.
இதனால் பெரும்பாலும் அந்த காலகட்டத்தில் உணவுகளைக்கூட தவறவிடுகிறது.
இதனால் தான் ஒக்டோபஸ் தன் முட்டைகள் பொரிந்த பின் ஒரு சில நாள்களே உயிர் வாழும் என்பதும் குறிப்பிடத்தக்கது.